Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது எல்லாரையும் பாதிக்கும்… குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… நிறுத்தப்பட்ட பணிகள்…!!

செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பூவாத்தம்மன் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் மேல் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு இது உடல் நலத்தை பாதிக்கும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு பிறகு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அந்த பணிக்கு தேவையான உதிரிபாகங்கள் பூவாத்தம்மன் தெருவிற்கு வந்து சேர்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெட்ரோல் கேனுடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்போது திடீரென குழந்தைகள் மீதும் தங்கள் மீதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாலுகா அலுவலக ஊழியர்கள் அந்த பெண்களிடம் இந்த பெட்ரோல் கேன்களைப் பறித்துக்கொண்டு அவர்களை தாசில்தார் ராஜனிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்களுடன் தாசில்தார் ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு பூவாத்தம்மன் தெருவில் தனியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |