Categories
அரசியல்

“தலைவா நீ வேற ரகம்!”…. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அ.தி.மு.க அமைச்சர்….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், புறநானூறு, திருக்குறள் போன்றவற்றை உலகறிய செய்யும் வகையில் ஐ.நா. சபை வரை எடுத்துச்சென்று தமிழ் பெருமையை பறைசாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருப்பது தமிழக மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதேபோல் தமிழக மக்களும் நமது பிரதமரை வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருக்கும் போது மோடியை எதிர்த்து பேசி விட்டு தற்போது பிரதமர் மதுரைக்கு வருகை தர இருக்கும் நிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கும் திமுகவின் இந்த நிலைபாடு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று பேசியுள்ளார்.

மேலும் திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட வேண்டும். இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக அனைத்து செயல்களையும் செய்து வருவது பாராட்டுதலுக்கு உரியது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ரூ.5 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதனை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக நிறைவேற்ற வேண்டும். இறுதியாக எதிர்கட்சி, ஆளும் கட்சி என்று எந்த நிலை வந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே போராடும் உங்களின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு என்று கூறி விடை பெற்றார்.

Categories

Tech |