Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த டிரைவர்…. கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பே கோபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாகரன் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் செல்போன் விற்பனைக்காக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் கருணாகரன் அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்திற்கு 2 செல்போன் வாங்கியுள்ளார். அதன்பின் கருணாகரன் அங்கிருந்து சென்று அப்பகுதியில் உள்ள முருகர் கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர் திடீரென கருணாகரனின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

அதற்கு கருணாகரன் தரமுடியாது என்று கூறியதால் அவர்கள் அவரிடமிருந்த 2 செல்போன்களையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து கருணாகரன் திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருநெல்வேலிப் பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன், ராசப்பா, உலகப்பன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |