Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடிய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடையற்காடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்பர் தாம்சன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த செல்போனை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து ஜெஸ்பர் தாம்சன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சவேரியார்புரம் பகுதியில் வசிக்கும் ஜெயகுமார், ஜெயசூர்யா, தினேஷ் மற்றும் எட்வின்ராஜ் ஆகியோர் சேர்ந்து செல்போனை திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |