செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் செய்யது நசிருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை 2 மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நசிருதீன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் செல்போன் திருடியவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் தாமஸ் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தாமசை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.