Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரநாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள கல் மண்டபத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலையில் தனது தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து சங்கரநாராயணன் அவரை விரட்டி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வடலிவிளை பகுதியில் வசிக்கும் சிங்கதுரை என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து சங்கரநாராயணன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிங்கதுரையை கைது செய்ததோடு அவரிடமிருந்து செல்போனையும் மீட்டனர்.

Categories

Tech |