திவ்யதர்ஷினி புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.