Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தனுஷ்…. வைரலாகும் வீடியோ….!!!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது குழந்தைகளுடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் ட்ரெண்ட் அடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |