ரம்பா தனது மூத்த மகளின் 11 வயது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகை ரம்பா முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது குழந்தைகள், குடும்பம் என பிஸியாகி விட்டார். இதனையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில், ரம்பா தனது மூத்த மகளின் 11 வயது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் ரம்பாவை போலவே அவள் மகள் உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CZBH3T7sQcj/