அட்லீயின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்து அட்லீ தற்போது முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் அட்லி தான் புதிய ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அட்லீயின் புதிய ஹேர்ஸ்டைலை பற்றி கமண்ட் செய்து வருகின்றனர்.