நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் இதனை படக்குழு வெளியிடவில்லை.
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி பல செயல்களையும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் சர்வதேச கார் ரேஸில் கலந்து கொண்டு பல சாதனைகள் புரிந்துள்ளார். அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த f2 கார் ரேசில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.