Categories
கிரிக்கெட் தமிழ் சினிமா விளையாட்டு

செம மாஸ்…. ‘வாத்தி கம்மிங்’…. ஆட்டம் போட்ட வார்னர்….. வைரலாகும் வீடியோ …!!

பிரபல கிரிக்கெட் வீரர்கள் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வாத்தி கம்மிங்’ மிகவும் டிரெண்ட் ஆனது.

இப்பாடலுக்கு பல திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் பிரபல கிரிக்கெட் வீரர்களான ரஷித் கான், டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |