டி.ஆர்.பி யில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான, டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் படங்களை பற்றி பார்ப்போம்.
அதன்படி டிஆர்பி முதலில் இருப்பது தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் தான். சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆகையால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் தான் தான் டிஆர்பி முதலிடத்தில் இருக்கிறது.
இதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கும் படம் பிச்சைக்காரன். உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தை சசி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சாட்னா நடித்திருந்தார். தனது அம்மாவிற்காக மகன் பிச்சை எடுக்கும் கதையம்சம் கொண்ட இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து 3வது இடத்தில் இருக்கும் படம் சர்கார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தேர்தலில் விஜய் தனது ஒரு ஓட்டை வாங்குவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்து தனது உரிமையை கைப்பற்றியதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.
இதை அடுத்து நான்காவது இடத்தில் இருக்கும் திரைப்படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சமந்தா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 5வது இடத்தில் இருக்கும் திரைப்படம் பிகில்.
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கால்பந்து போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. ஆகவே இந்த ஐந்து திரைப்படங்கள்தான் டிஎன்பியில் முதல் ஐந்து இடத்தில் இருந்து வருகிறது.