‘பீஸ்ட்’ படத்தின் மற்றொரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், தற்போது இந்த படத்தின் மற்றொரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
THALAIVAA @actorvijay 🔥🔥🔥#Beast pic.twitter.com/vwdEkYdyn0
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) December 10, 2021