தனுஷின் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜகமே தந்திரம்”. இத்திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
அதன்படி வரும் ஜூன் 1-ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான “கர்ணன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், பல திரைப்பிரபலங்கள் மத்தியிலும் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.