‘RRR’ படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
இந்திய சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ”பாகுபலி” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”.
மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.
100 MILLION+ VIEWS across all languages for #RRRTrailer on @YouTubeIndia in 6 Days🤩
FASTEST FOR ANY FILM IN INDIA🇮🇳⚡️
▶️ https://t.co/yJJoJOn2hK 💥#RRRTrailerHits100Mviews @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @DVVMovies @LycaProductions #RRRMovie pic.twitter.com/XNwZSKIrav
— Nikil Murukan (@onlynikil) December 15, 2021