பிரபல தொகுப்பாளினி டிடி அந்தமான் தீவில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் முன்பு போல் இல்லாமல், முக்கிய பிரபலங்களின் நிகழ்ச்சிகளை மட்டும்தான் தொகுத்து வழங்குகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நயன்தாராவின் நிகழ்ச்சி ஒன்றை டிடி தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவருக்கென்றே சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில், அந்தமான் நிக்கோபர் தீவில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.