மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள வாலீஸ்புரம், சேனப்பநல்லூர் ஆகிய கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 60 வீடுகளில் உட்புறத்தில் இருக்கும் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்துவிட்டது.
இதனையடுத்து வீரமணி என்பவர் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து அவர் மீது விழுந்து விட்டது. இதில் வீரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகத்தினர் வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.