சிமெண்ட் தூண்களை திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் ஜெயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளி கோவில் பகுதியில் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் கம்பி வேலி அமைப்பதற்காக சிமெண்டால் ஆன 4 தூண்களை தோட்டத்தில் வாங்கி வைத்துள்ளார்.
இந்தத் தூண்களை அதே பகுதியில் வசிக்கும் சுடலைக்கண், சாமிதுரை, சண்முகவேல் இசக்கி பாண்டி ஆகியோர் காரில் வைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயபாண்டியன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தூண்களை திருடிச் சென்ற 3 நபரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.