தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜீவா தற்போது வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தணிக்கை குழு சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து 13 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது குறித்து நடிகர் ஜீவா பேட்டியில் கூறியதாவது, நான் புதிதாக வரும் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடைய ஏராளமான படங்களை புதுமுக இயக்குனர்கள் தான் இயக்கியுள்ளனர்.
அதேபோன்று இந்த படத்தையும் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். நான் இந்த படத்தில் ஒரு யூட்யூபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்,சிவா மனசுல சக்தி படத்தை போன்று இதுவும் காமெடி கலந்த ஜாலி திரைப்படமாகவே இருக்கும். இந்த படத்தில் காதல், காமெடி, கலாட்டா போன்ற அனைத்து விஷயங்களும் இருக்கிறது. மேலும் இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது அவர்கள் 13 காட்சிகளை வெட்டி நீக்கி விட்டனர் என்று கூறினார்.