Categories
மாநில செய்திகள்

2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விவரங்கள் அரசிதழில் வெளியீடு!

2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்றன.

இந்நிலையில் வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை பதிவேடு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், அந்தப் பணியின்போது மொத்தம் 31 கேள்விகள் கேட்கப்படும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |