2021 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலையில், அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் அகவிலைப்படி உயர்வு நிறுத்தபட்டாலும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருப்பது ஊழியர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.