Categories
மாநில செய்திகள்

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது. அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது.

அதன்படி நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மாற்றங்களை கொண்டு வர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயிலில் உள்ள கழிவறையை குளியலறையாக மாற்றி உள்ளனர்.

கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு அங்கு வாளி, குவளை, சோப் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |