இலங்கையின் மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
கடும் நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையில், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.