Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியை கண்காணிக்க சென்னை உட்பட 4 நகரங்களுக்கு மத்திய குழுக்கள் அமைப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என உள்துறை இணைச் செயலாளர் கூறியுள்ளார். சென்னை வரும் மத்திய குழு கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் மத்திய குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 28 நாட்கள் 15 மாவட்டங்களிலும், 14 நாட்கள் 80 மாவட்டங்களில் இல்லை என்று உள்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |