Categories
உலக செய்திகள்

“இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகள்!”.. ஒப்புதல் அளித்த மத்திய அரசு..!!

இந்தோனேசியாவிற்கு கோவாக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனாகா நிறுவனமும்  சேர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்திருந்தது. இத்தடுப்பூசியை, சீரம் நிறுவனமானது உற்பத்தி செய்கிறது. இதேபோன்று முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின்  தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில், இவ்விரு தடுப்பூசிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க தயாரிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசியை, உற்பத்தி செய்ய அனுமதி பெற்று சீரம் நிறுவனம் உற்பத்தி செய்திருக்கிறது. எனினும், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு வாரியமானது, தற்போது வரை இத்தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

எனினும் சீரம் நிறுவனம், இத்தடுப்பூசிகளை கோடிக்கணக்கில் உற்பத்தி செய்துவிட்டது. இதில் ஒரு கோடி தடுப்பூசிகளுக்கும் மேலாக, அடுத்த மாதக் கடைசியில் காலாவதியாகிவிடும். எனவே, சீரம் நிறுவனமானது, தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்தில் இந்தோனேசிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தீர்மானித்திருக்கிறது.

இதற்காக, சீரம் நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதலைக் கோரியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு, 5 கோடி கோவாக்ஸ் தடுப்பூசிகளை இந்தோனேசியாவிற்கு அனுப்ப ஒப்புதல் அளித்திருக்கிறது.

Categories

Tech |