Categories
Uncategorized தேசிய செய்திகள்

இளைஞர்களே! மிஸ் பண்ணாதீங்க…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு வேளாண் சிகிச்சை மையம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு இளைஞர்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், வேளாண் சிகிச்சை மையம் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு பல ஆலோசனைகள் அளிக்கப்படும்.

இந்த வேளாண் சிகிச்சை மையம் இளைஞர்களால் தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில், இளைஞர்கள் இதன் மூலமாக வேலை வாய்ப்பு பெறவும் முடியும். இந்த வேளாண் சிகிச்சை மையத்தை தொடங்குவதற்கு 45 நாட்கள் இலவச பயிற்சி மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சியின் மூலமாக வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது, விவசாயிகளது தொழில் மேம்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் போன்றவை குறித்த ஆலோசனை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த பயிற்சி முற்றிலுமாக இலவசமாக அளிக்கப்படுகிறது என்றும் பயிற்சி முடிந்தபின் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த விளைபொருட்களில் நன்றாக லாபம் பெற முடியும் என்றும் வழிக்காட்டப்படுகிறது.

Categories

Tech |