Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அமைச்சகம் தடை விதிப்பு..!!

கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பதஞ்சலியின் மருந்து ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படும் வரை விளம்பரம் செய்யவும் ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. பெயர், மருந்தின் கலவை பற்றிய விளம்பரங்களையும் பதஞ்சலியிடம் மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், மருந்தின் அளவு, மருந்தினை சோதனை செய்த இடங்களின் விவரங்களை வழங்க பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. இந்த கிட் மூலம், நோயாளிகள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன என்று தெரிவித்திருந்தது.

கொரோனா தடுப்பு மருந்து குறித்துப் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |