Categories
அரசியல் மாநில செய்திகள்

$ 203க்கு வாங்கும் மத்திய அரசு… $ 133க்கு வாங்கும் தமிழக அரசு… மோடி சர்க்காருக்கு டப் கொடுத்த திராவிட மாடல் ..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது.

அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்கள்.  2௦3 டாலர் ரேட், இந்த விலைகளுக்கு.. நாங்கள் சொல்லக்கூடிய நிறுவனங்களுக்கு….  நீங்கள் கொள்முதல்கான உத்தரவுகளை வழங்க வேண்டும் என்று கொடுத்தாங்க..  இதுல யாரு குறைவாக கொள்முதல் செஞ்சிருக்கா ? யார் குறைவான விலை நிர்ணயம் செஞ்சி இருக்கா ? இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆண்டு 133 டாலர் தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.

மின்வாரியத்தை பொருத்தவரைக்கும் எந்த இடங்களிலும் ஒன்றிய அரசை  போல கூடுதலாக விலை கொடுக்காமல்,  குறைந்த விலைக்கு…  திறந்தவெளியில் வாங்குகின்றது. டெண்டர் ஆன்லைனில் போடப்பட்டு,  கொள்முதல் செய்யப்படுகிறது. இப்படி இருக்கக்கூடிய ஒவ்வொரு சூழ்நிலையிலும்… ஒவ்வொரு துறைகள் வாரியாக….  மிக நேர்த்தியாக…  மிகச் சிறப்பாக வெளிப்படை தன்மையோடு அரசு நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற போது…  பல்வேறு குற்றச்சாட்டுகளை ஏதாவது…  வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ என்ற நோக்கத்துல….  வாய்க்கு வந்ததெல்லாம் ஒரு கருத்துக்களாக,  குற்றச்சாட்டுகளை…  அவதூறுகளை பரப்புகின்ற  நோக்கத்திலே நீங்க சொல்லக்கூடிய நபரின் உடைய செயல்பாடுகள் அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |