Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஊரங்கில் சில தளர்வுகள் அமல் – அறிவிப்பில் இல்லாதவை என மத்திய அரசு கண்டனம்!

கேரள அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ஊரடங்கு உத்தரவு இருந்து சில தளர்வுகள் அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு அறிவித்துள்ள சில தளர்வுகள் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளில் இல்லாதவை என கண்டனம் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

கேரளாவில் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது, கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போக செய்யும் என குறிப்பிட்டுள்ளது. உணவகம், பேருந்து போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதி வழங்கியதை மத்திய அரசு சுட்டி காட்டியுள்ளது.

முடிதிருத்தும் கடைகள், உணவகங்கள் , புத்தக கடைகள், குறுகிய தூர பேருந்து பயணத்திற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கேரளாவில் மத்திய அரசு அறிவுறுத்திய படியே ஊரடங்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு விளக்கம் அளித்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

Categories

Tech |