மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி. என்று அழைக்கப்படும், விடுமுறை கால பயண சலுகை கிடைக்கிறது. அதில் சில புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான பயணப்படி விடுமுறை திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. என்னவென்றால், இனி மத்திய ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
கொரோனா காரணமாக எல்.டி.சி யைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஊழியர்களுக்கு உருவானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் LTC அதாவது விடுமுறை பயணப்படி கிடைக்கிறது. இதன் கீழ், இந்த நேரத்தில், அவர்கள் நாட்டில் எங்கும் பயணம் செய்யலாம். இதன் மூலம் விமானப் பயணம் மற்றும் இரயில் பயணச் செலவை ஊழியர் பெறுகிறார். இதன் மூலம், ஊழியர்களுக்கு 10 நாள் பி.எல் என்பது கிடைக்கும்.
இதற்கு பதிலாக ஊழியர்களுக்கு ரொக்கமாக தொகை கொடுக்கப்படும். பணியாளரின் தேவை ஏற்ப பயண தொகை கொடுக்கப்படும். விடுப்புக்கு பதிலாக தொகையைப் பெற அதன் தொகை அளவிலான பணத்தை செலவழிக்க வேண்டும். 2021 மார்ச் 31 க்கு முன் தொகையை செலவிட வேண்டியிருக்கும். ஊழியர்கள் 12% அல்லது அதற்கு மேற்பட்ட GST-யை ஈர்க்கும் பொருட்களில் தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும். ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் அல்லது வணிகரிடமிருந்து மட்டும் சேவைகள் அல்லது பொருட்களை வாங்க முடியும். சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவதும் டிஜிட்டல் முறையில் செய்யப்பட வேண்டும் .