Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை – ராகுல் காந்தி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

ஆனால் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் அமைதியாக இருப்பதாகவும், அவர் சரணடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு எண்ணிக்கியானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி காட்சி மூலம் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றுள்ளனர். இந்த சூழலில் ஆலோசனையின் புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |