கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை, அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து மீள சரியான உத்தி தேவை என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது தேவை ஆதரவும், நிதி உதவியும் தான். ஏழை மக்கள், கூலித் தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு பணம் போட வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 செலுத்த வேண்டும்.
இது அவர்களின் வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் என கோரிக்கை வைத்த்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 45வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை மகாராஷ்டிராவில் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஏறியதில் குழந்தை உட்பட சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி அனைத்து தொழிலாளர்கள் வாங்கி கணக்கிலும் பணம் செலுத்தக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்.