தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாணலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனோவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் 1,848 பேர் சிகிச்சை பெறுகின்றனர் தமிழகத்தில் 17 கொரோனா பரிசோதனை மையம் உள்ளது மேலும் 21 கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார். வெளிநாடு, மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களும் தாங்களாகவே பரிசோதனை செய்ய முன்வர வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களவை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல; மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.500 கோடி வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். சென்னையிலும் நடமாடும் காய்கறி கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் தங்கி உள்ள முகாம்களின் எண்ணிக்கை 268ஆக உள்ளது. அதில் 11,530 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர் என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.