Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க… மத்திய அரசு உத்தரவு!!

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதார செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

வழக்கு விவரம் யாதெனில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆருஷி ஜெயின் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில், அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் ஊதியம் பிடித்தம் விவகாரத்தை உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்க முடியாத என்ற கேள்வியை எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மருத்துவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவேண்டும் என தெரிவித்து, மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என வாதிட்டார்.

மேலும், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவர்களை தேவையான இடங்களில் தங்கவைத்து உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனக் ஆணை பிறப்பித்தது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

Categories

Tech |