நாடு முழுவதும் ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது நாடு முழுவதும் ஏப்ரல்14 பிறகு உடனே நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்கலாமா ? அல்லது முடித்துக் கொள்ளலாமா ? என்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஊரடங்கு முடித்துக் கொண்டால் எந்த மாதிரியான விளைவு ஏற்படும். பொதுமக்கள் பெரிய அளவில் வெளியே வந்துவிட்டால் இந்த நோய் பரவல் ஏற்பட்டு விடுமே என பிரதமர் நரேந்திர மோடியும் பல யோசனை தெரிவித்திருக்கிறார்.
இது சம்பந்தமாக மத்திய அமைச்சர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து இன்றைய தினம் டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு துறையைச் சார்ந்த அமைச்சர்களும் பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 100 கடந்து மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டி விடாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று அமைச்சர்கள் ஆலோசித்துள்ளார்கள். ஆனாலும் இது சம்பந்தமான எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.
பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போது வரை ஊரடங்கு நீட்டிப்பு அல்லது முடித்துக்கொள்வது தொடர்பான எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனாலும் நோயின் தீவிரம் மிக அதிகமாக பரவி வரக் கூடிய நிலையில் ஊரடங்கு காலநீட்டிப்பு செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சுகாதார துறை அமைச்சகம் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளது.