ஏர் இந்தியா விமானத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் விமான கடன் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் அந்நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார். அரசு எதிர்பார்க்கும் தொகை கொடுத்து வாங்க முன்வரும் தனியார் நிறுவனத்திடம் ஏர்இந்தியா விற்கப்படும் என்றும், இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் குறுகிய காலத்திலேயே முடிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும் ஏர் இந்தியா விமானத்தை போட்டிபோட்டு வாங்குவதற்கு பலர் முயற்சி செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.