மத்திய அரசின் ஜன்தன் ஓவர் டிராப்ட் திட்டத்தின் மூலம் மாதம் 5 ஆயிரம் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வங்கியில் கணக்கு இல்லாத எளிய மக்கள் 7 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் போன்ற வசதிகள் மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த ஜந்தன் கணக்குகளில் ஓவர் டிராஃப்ட் வசதியை பெற முடியும்.
இதன் மூலம் குடும்பத்தில் உள்ள ஒரு நபர் 5000 வரை டிராப்ட் வசதியை பெற முடியும். கணக்கில் பணம் இல்லாமலேயே அரசிடம் இருந்து 5,000 வரை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும். இதற்கு தகுதியாக உங்கள் கணக்கில் வாங்கப்படும் கடன் தொடர்பு ரெக்கார்டுகள் பார்க்கப்படும். கணக்கு தொடங்கி ஆறு மாதங்கள் முடிவடைந்து வங்கி பரிவர்த்தனை சிறப்பாக இருந்தால் நீங்கள் இதன் மூலம் பயன் பெறலாம். ஜீரோ பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு 15,000 வரை கிடைக்கும். வங்கிகளின் முடிவைப் பொறுத்து இது அமையும். ஓவர் டிராப்ட் வசதியைப் பெறுவதற்கு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் 20 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். இது வங்கியின் முடிவை பொறுத்தது.