Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸை சமாளிக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் – ராகுல் காந்தி!

மத்திய அரசு கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது என ராகுல்கந்தி தெரிவித்துள்ளார்.

சீனாவை உலுக்கி வரும் கொரோனோ வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனா, ஈரான், இத்தாலி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண் – 011 23978046 ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மத்திய அரசு கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க உறுதியான செயல்திட்டத்தை என்ன இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக மக்களின் முன் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |