பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இதனால் ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து முக்கிய பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் பாண் எண்ணை இணைப்பது, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால் பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.