இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, அனுமதி வழங்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை பல நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கூடுதலாக நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று பகுதிகளில் மருத்துவக் கல்லூரி தொடங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.