வங்கித்துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலையில், நாட்டில் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் வரைவுக்கு கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவு குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கமர்சியல் வங்கிகள் மட்டுமே ரிசர்வ் வங்கி சட்டம் 2019க்கு கட்டுப்பட்டுவந்த நிலையில், மேற்கண்ட கூட்டுறவு வங்கிகளும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தார்.
அதேவேலை, கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக நடவடிக்கைகள் கூட்டுறவு பதிவேட்டு சட்டங்களின்படியே நடைபெறும் எனவும், வங்கிசார் பணிகளின் கண்காணிப்பு மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டுவரப்படும் எனவும் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளில் சுமார் 8 கோடிக்கும் மேல் பயனாளர்கள் கணக்கு வைத்துள்ளதாகவும், இவர்கள் வைப்புத்தொகையாக 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.