Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் மின்சாரச் சட்டத்திருத்தம் ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து – மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தம் விவசாயிகள், ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது.

மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். இதனால் மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும். மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இதுவரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,

மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க “புதிய மின்சார திருத்த சட்டத்தை” கொண்டு வரும் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். உதய திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்கட்டண உயர்வு,

மின் வாரியத்திற்கு மீண்டும் இழப்பு, இலவச மின்சாரத்திற்கு ஆபத்து என பல்வேறு நெருக்கடிகளை தமிழகம் அனுபவித்து வருகிறது. அதிமுக அரசு காயம் ஏற்படாமல் தன்னை காத்துக்கொள்ள எப்போதும் செய்வதை போல இப்போதும், ஆமாம் சாமி போட்டு நழுவவிடாமல் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாநிலங்களை ஓரம் கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |