Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் புதிய சட்டம்… பாதிபேர் ஜெயிலுக்கு போவாங்க…! அதிர வைத்த BJPமாநில தலைவர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அரசு எங்கேயுமே விவசாயிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மின் கட்டணத்தை  உயர்த்துங்கள் என்று அந்த சட்டத்தில் சொல்லல. எங்கேயுமே மத்திய அரசு இலவசமாக கொடுக்காதீங்க அப்படினு எங்கேயும் சொல்லல. தமிழ்நாட்டில்தான் இந்த  டிராமா. சொத்து வரியை  ஏத்துனாங்க. ஏன் மத்திய அரசு சொன்னாங்க ?  டாக்குமெண்ட் எங்க ?  பேப்பர் எங்க ? அது இல்லைங்க.

மத்திய அரசினுடைய மின்சார சட்ட மசோதா வந்துவிட்டது என்றால்,  நாம ஏற்கனவே சொல்லி இருப்பது போல தமிழகத்தினுடைய பாதி அரசியல்வாதிகள் ஜெயிலுக்கு போவாங்க.  அரசியல்னாவே நம்மளை பற்றி திட்டி பேசி இருப்பாங்க. ஓட்டு அரசியல் பேசி இருப்பாங்க.  ரஜினிகாந்த் அவர்களை,  ஒரு முக்கியமான மனிதரை தமிழகத்தில் ஆளுநர் அழைத்து,  ஒரு தேநீரில் பேசினாரு.  மக்கள் எப்படி இருக்காங்க ? உங்கள் பார்வை என்ன ? அப்படின்னு அதை பத்தி பேசி இருக்காங்க.

அதுக்கு வேலை இல்லாத அரசியல்வாதிகள் சில பேர்,  இதை வைத்துதான் அரசியல் வியாபாரம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் என்ன செய்வது ? எதற்கு பால்வளத் துறை அமைச்சர் வேண்டும். விவசாயிகளிடம் பால் வாங்கி,  அதை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து ஊற்றுவதற்கா  அமைச்சர் வேண்டும். பாலை வைத்து அதில் இருந்து பால்கோவா  செய்யலாமா ?

அந்த பாலை வைத்து அதிலிருந்து ஹெல்த் மிக்ஸ் செய்யலாமா? புரோட்டின் மிகிஸ் செய்யலாமா ? அதன் மூலமாக சந்தையில் ஹார்லிக்ஸ்ஸோடு போட்டி போட்டு,  ஆவின் நிறுவனத்தை உயர்த்தலாமா ? அதன் மூலமாக விவசாய பெருமக்களுக்கு பணம் கொடுக்கலாமா ? இப்படி யோசிப்பதை விட்டுவிட்டு,  தமிழக அரசு மட்டும்தான் பிற்போக்காக யோசிக்கிறது என விமர்சித்தார்.

Categories

Tech |