சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உணவு வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை டெல்லியில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.அப்போது சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய பூபேஷ் பாகல், “மத்திய அரசு நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்தேன்.மத்திய அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 நிர்ணயித்து நெல் கொள்முதல் செய்கிறது. ஆனால் மாநில அரசு விவசாயிகளுக்கு கூடுதல் பணம் கொடுத்து நெல் கொள்முதல் செய்கிறது.இந்த நிலையில் கூடுதல் விலையில் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுக்கிறது. எனினும் மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுக்கு சாதகமாக முடிவெடுக்கப்படும் என்று கூறினார்கள். விவசாயிகள் பிரச்னையில் அரசு கவனம கொள்ள மறுக்கும்பட்சத்தில் விவசாய போராட்டம் நடக்கவும் வாய்ப்புள்ளது” என்றார்.