Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் சேவை ரத்து: மத்திய ரயில்வே!!

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதேசமயம் ஜூன் 30ம் தேதி வரை வெளிமாநில தொழிலாளாளர்களை மீட்க சிறப்பு ரயில்கள் மற்றும் ஷர்மிக் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 11ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதற்கான முன்பதிவு கடந்த 11ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கியது. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. இதையடுத்து, 15 சிறப்பு ரயில்களின் முன்பதிவு மாலை 6 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களின் தரவுகளை இணையத்தில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் மாலை 6 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அறிவுரைகளையும் வெளியிட்டது. அதன்படி, நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயிகளில் பயணிக்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஊரடங்கு முடியும் வரை அதாவது ரயில் மற்றும் விமான சேவையை தமிழகத்தில் இயக்க வேண்டாம் என முதல்வர்பழனிச்சாமி வேண்டுகோள் வைத்திருந்தார். அவரின் வேண்டுகோளிற்கு ஏற்ப தமிழகத்தில் 2 ரயில் சேவை தவிர்த்து ரயில் சேவைகள் இயங்காது என மத்திய ரயில்வே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ரயில் சேவை இயங்காது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |