Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான 6 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது, சமூக விலகல், அத்தியாவசிய பொருட்கள் சப்ளையை உறுதி செய்வது, சுகாதார கட்டமைப்புகள், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு, தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் நிலைமை குறித்து ஆய்வு நடத்தி விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கும்.

இந்த நிலையில், மேற்குவங்கத்தை ஆய்வு செய்ய மத்திய குழுக்களை ஏன் அனுப்புகிறீர்கள் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் உரிய பதில் அளிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று ஆய்வுகளை மேற்கொள்ள மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா மற்றும் ஜல்பைகுரிக்கு வருகை தந்த மத்திய குழுக்களை உள்ளூர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க மாநிலத்திற்கு கடிதம் எழுதியுள்ளதுடன், ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளது.

Categories

Tech |