20 வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப பில்லியனர் பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் ஊழியர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குனர் இடையேயான நெருக்கம் குறித்து மைக்ரோசாப்ட் CEO சத்ய நடேல்லா மௌனம் உடைத்துள்ளார்.
கடந்த மே மாதம் 3-ஆம் தேதி மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில்கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் பில்கேட்ஸ் 2000-ம் ஆண்டு மைக்ரோசாப்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகவும் , அவர் அந்த நெருக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டதாகவும், அதை தொடர்ந்து மைக்ரோசாப்ட் இயக்குனர் குழுவிற்கு மெலிண்டா விவாகரத்துக்கு தயாரானதாக கடிதம் கிடைத்திருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000-ல் இருந்ததைவிட 2021-ல் மிகவும் வேறுபட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் CEO சத்ய நடேல்லா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு பிறகு எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்கிறது. 2006-ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியிட உறவுகளை ஊழியர்கள் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கொள்கையைக் கொண்டுள்ளது என்றும் நடேல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.