இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது.
பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சரியாவதற்கு ஆறு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும். ஒவ்வொரு பெண்களும் இந்த காலத்தில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் அவஸ்தைப்படுவார்கள்.
முடிந்தது ஆறு மாதங்கள் பெண்கள் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கீறல் இருக்கும். அறுவை சிகிச்சைக்கு முன்பு அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடப் பகுதியில் செலுத்தப்படும் மயக்க ஊசி பல நேரங்களில் பிரசவத்திற்குப் பிறகு மயக்க உணர்வை தரும். குமட்டல் மயக்கம் பயம் போன்ற உணர்வுகளை தரும். சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்கள் வரை உடல் நிலை எப்படி இருக்கும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
அறுவை சிகிச்சை செய்த 24 மணி நேரத்தில் பெண்கள் அவர்களாகவே இருக்கமாட்டார்கள். அறுவை சிகிச்சை செய்த பெண்கள் அருகில் குழந்தையை வைக்கமாட்டார்கள். குழந்தையின் அரவணைப்பை தாய்க்கு தேவை என்பதால் தாயின் உடலுக்கு அருகில் குழந்தையை வைப்பது வழக்கமாகிவிட்டது. பிரசவம் முடிந்து 24 மணி நேரத்தில் பெண் எதிர்கொள்ளும் உபாதை மிகவும் அதிகமாக இருக்கும். குறிப்பாக பிரசவம் முடிந்த 24 மணி நேரத்தில் உடல் உபாதை அதிக அளவில் இருக்கும்.
சிசேரியனுக்கு பிறகு பெண்களுக்கு உண்டாகும் ஆபத்து மிக முக்கியமானது. ரத்த உறைவு, அதிக எடை கொண்டவர்கள் கர்ப்பகாலத்தில் நீண்ட நேரம் படுக்கையில் இருப்பார்கள். ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். நீண்டநாள் ஓய்வில் இருந்தால் இந்த பிரச்சனை உருவாகும். சிறுநீர் கழிக்க நடக்க இயலாமல் சிறுநீர் பை பொருத்தி இருப்பார்கள். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் கால்களில் ரத்த ஓட்டம் எளிதாக இருக்காது.
பிரசவத்திற்கு பிறகு எல்லா பெண்களுக்கும் கருப்பை சுருங்க தொடங்கும். அப்போது வலி உண்டாகும். சிசேரியனுக்கு பிறகு அறுவை செய்த இடம் தையல் பகுதியில் இதனோடு கருப்பை சுருங்குவதை மிக அதிக வலியை உண்டாக்கும். பிரசவத்திற்கு பிறகு நோய் தொற்று வராமல் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக யோனி பகுதியில் பரவக்கூடும், சிறுநீர்ப்பாதை, கருப்பை வாய் பெண்ணுறுப்பு என எல்லாமே அருகில் இருப்பதால் எளிதில் தொற்று ஏற்படும். சிசேரியன் பிறகு மருத்துவர்கள் கவனமாக கண்காணிப்பது அவர்களின் யோனி இரத்தப்போக்கை தான்.
சிசேரியன் முடிந்த முதல் ஒரு வாரம் ஓரளவு உபாதை குறைந்திருக்கும். ரத்தப்போக்கு மற்றும் குறையாமல் இருக்கும். அந்த சமயங்களில் ஆபத்தான ரத்தப்போக்கும் முதல் ஒரு வாரத்திற்கு இருக்கும். முதல் எட்டு வாரங்கள் வரை ஆவது உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும். பொதுவாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையாவது வாகனங்கள் ஓட்டுவது முதல் கனமான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். உடலில் காயம் ஆறி இருக்கும். ஆனால் ஒரு வாரத்திற்கு ரணமாக இருக்கும். காயத்தை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாக இருக்கும். இதனால் கடினமான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.