ஆன்லைன் வகுப்பு முடிந்து ஆபாசபடங்கள் பார்த்ததில் 15 வயது சகோதரியை 13 வயது சகோதரன் கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பவாடி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் குழந்தைகள் 13 வயது மகனும், 15 வயது மகளும் ஆன்லைன் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பு படித்து முடித்த பிறகு, அவ்வபோது ஆபாசப்படங்களை பார்த்துள்ளனர். பிறகு இருவரும் ஆபாச படங்களை பார்த்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்பிறகு அந்த வீட்டிற்கு வந்த சிறுமியின் பாட்டி தனது பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். அதற்கேற்றார்போல் அந்த சிறுமியும் அவ்வபோது வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
இதனால் அந்தப் பாட்டி பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறவே, அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்த போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று விசாரணை செய்ததில், சகோதரன் தான் இவ்வாறு செய்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு சகோதரன் மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரி இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
சிறு குழந்தைகள் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பார்த்து கெட்டுப்போகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு படிக்கும் போது, அவர்கள் என்ன செய்கிறார்கள் எதைப்பற்றி பார்க்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் தீவிர கவனமுடன் பார்ப்பது மிகவும் அவசியம். பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது.